ஹமில்டன் பகுதியில் வீடு ஒன்றில் இடம்பெற்ற பாரிய தீவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
ஹமில்டன் பகுதியில் நேற்று முன் தினம் (செவ்வாய்கிழமை) வீடு ஒன்றில் இடம்பெற்ற பாரிய தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு தீயணைப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
Stoney Creekற்கு தெற்கே, Mud Street பகுதியில் அமைந்துள்ள வீட்டிலேயே இந்த தீ பரவல் சம்பவம் சம்பவித்துள்ளது.
தீப் பரவலுக்கு உள்ளான வீட்டிலிருந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சுமார் 22 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தீயணைப்பு முயற்சியின் போது, இரண்டு தீயணைப்பு படை வீரர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், இச்சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ தீயணைப்பு துறை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.