அமெரிக்காவில் தொடரும் அவலம்
ஆயுதங்கள் அற்ற நிலையில், கைகளை மேலே உயர்த்தி பொலிஸார் முன் சரணடைந்த அமெரிக்க கறுப்பினத்தவரை பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொன்ற காட்சி அடங்கிய காணொளி வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தாம் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வார ஆரம்பத்தில் கறுப்பினத்தவர் ஒருவர் ஆயுதங்கள் அற்றநிலையில், எவ்வித வன்முறைகளிலும் ஈடுபடாது பொலிஸார் முன் சரணடைந்த போதும், குறித்த பொலிஸ் உத்தியோகத்தரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இது தொடர்பில் சி.சி.டி.வி. காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதனையடுத்தே நேற்றையதினம் (வியாழக்கிழமை) தாம் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறான போதும், குறித்த துப்பாக்கிப்பிரயோகம் கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் வெளியாகிய காணொளி குறித்த சம்பவத்திற்கானதல்ல என்றும் கூறப்படுகின்றது.
அண்மைக்காலமாக அமெரிக்காவில் அதிகரித்துவரும் இனவெறித் தாக்குதல்களால் நிராயுதபாணிகளாக இருக்கும் கறுப்பினத்தவர்கள் கொல்லப்படுவதுடன், இதனால் கோபத்தின் வசப்படும் கறுப்பினத்தவர்கள் பொலிஸார் மீது தாக்குதல்களை மேற்கொள்வதும் அதிகரித்துச் செல்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
– See more at: http://www.canadamirror.com/canada/66407.html#sthash.e7u6fSUa.dpuf