சீனாவில் 6000 தியேட்டர்களில் பாகுபலி! ஜாக்கிசான் படத்தை முந்தியது
பாகுபலி திரைப்படம் இன்று சீனா முழுவதும் சுமார் 6000 திரையரங்குகளில் நேற்று வெளியானது.
இந்தியாவில் மட்டும் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்த இந்த படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஜாக்கி சான் நடித்துள்ள Skiptrace படமும் அதே நாளில் வெளியானாலும், பாகுபலிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.
விமர்சகர்களும் Skiptrace’ஐ விட பாகுபலிக்கு அதிக மதிப்பெண் கொடுத்துள்ளனர், அதனால் வசூல் ரீதியாகவும் இந்த படம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குமுன் இந்திய படமான ‘பிகே’ சீனாவில் வெளியானபோது 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.