பூனையின் தலையில் கடித்த இளைஞர்; சில தினங்களில் பூனை இறந்தது
இவர் பூனையின் தலையை கடித்தும் துன்புறுத்தினாராம். அதன்பின் சில தினங்களில் அப் பூனை இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 வயதான கிறேக் மில்ஸ் எனும் இளைஞரே 2 வயதான பூனையின் தலையில் கடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
இவரும் மற்றொரு இளைஞரான டேவிட் வோல்கர் என்பவரும் ஒரு பாலின ஜோடியாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மேற்படி பூனை இறந்ததையடுத்து, டேவிட் வோல்கரும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என அயலவர்கள் சந்தேகப்பட்டனராம்.
டேவிட் வோல்கர்
இதனால் தான் இதில் சம்பந்தப்படவில்லை என நிரூபிப்பதற்காக இரகசியமாக தான் பதிவு செய்த வீடியோவை டேவிட் வோல்கர் (20) வெளியிட்டுள்ளார்.
கிறேக் மில்ஸ் பூனையை கடிக்கும் குரூரக் காட்சி இவ் வீடியோவில் பதிவாகியுள்ளது. தான் மேற்படி பூனையை கொன்றதாக கிறேக் மில்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதேவேளை, தற்போது கிறேக் மில்ஸிடமிருந்து பிரிந்து வாழும் டேவிட் வோல்கர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு ள்ளதாக தெரிவித்துள்ளார்
.