குடி போதையில் கனடிய விமானிகள் கைது?
கனடா- குடி போதையில் இருந்தனர் என்ற சந்தேகத்தின் பெயரில் விமானிகள் இருவர் கிளாஸ்கோ- லண்டன் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
டிரான்ஸ் அட்லான்டிக் விமானம் ஒன்று புறப்படுவதற்கு சிறிது முன்னராக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திங்கள்கிழமை கிளாஸ்கோவில் இருந்து ரொறொன்ரோ புறப்பட்ட விமானம் புறப்படுவதற்கு முன்னர் இருவர் கைது செய்யப்பட்டதாக கனடிய விமானசேவையான எயர் ரான்சாட் தெரிவித்துள்ளது.
37 மற்றும் 39வயதுடைய இருவரும் மது போதையில் இருந்ததாக ஸ்கொட்லான்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர். இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவர்.
எயர் ரான்சாட் பட்டய மற்றும் திட்டமிடப்பட்ட விமானங்களை கனடா மற்றும் பல ஐரோப்பிய, கரிபியன் போன்ற இடங்களிற்கு இடையில் சேவையில் ஈடுபடுத்துகின்றது.
மேலும் கருத்துக்கள் தெரிவிப்பதற்கு முன்னர் விசாரனை முடிவு மற்றும் சட்ட நடவடிக்கைகள் தெரிய வரும் வரை மேலும் கருத்துக்கள் தெரிவிக்க காத்திருப்பதாக விமான நிறுவனம் கூறுகின்றது.
– See more at: http://www.canadamirror.com/canada/66215.html#sthash.GFz2byaT.dpuf