வாகனத்தில் 8 அடி நீளமான பாம்பு
அமெரிக்காவில் வைத்தியசாலை வளாகமொன்றில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திலிருந்து 8 அடி நீளமான பாம்பொன்றை இருவர் இழுத்தெடுத்துள்ளனர்.
பென்சில்வேனியா மாநிலத்தின் கிங்ஸ்டன் நகரில் கடந்த வாரம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்நகரிலுள்ள வைத்தியசாலை வளாகத்தில் பெண்ணொருவருக்குச் சொந்தமான SUV ரக வாகனமொன்று நிறுத்தப்பட்டிருந்தது. அவ் வாகனத்தின் அடியில் பாம்பின் ஒரு பகுதி தென்பட்டதை அங்கிருந்த ஒருவர் கண்டார்.
அதையடுத்து ஆண்கள் இருவர் அவ் வாகனத்தின் ஒரு புறத்தை உயர்த்தி வைத்தபின், மேற்படி பாம்பை இழுத்தெடுத்தனர். 8 அடி நீளமுடையதாக இப்பாம்பு காணப்பட் டது.
அதன்பின் பிளாஸ்டிக் கொள்கலன் ஒன்றில் இப் பாம்பு அடைக்கப்பட்டது. இச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.