ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‛கோமாளி’. அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். இப்படம் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்து இவர் விக்ரம்மை இயக்க உள்ளார்.
அஜய் ஞானமுத்துவின் படம், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படங்களில் நடிக்க இருக்கிறார் விக்ரம். இந்த இரண்டு படங்களும் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாய் உருவாவதால் அதற்குள் குறுகிய காலத்தில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறார் விக்ரம். அதற்கு ஏதுவாக பிரதீப் சொன்ன கதை பிடித்து போக அவரது இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.