வெங்கட் பிரபுவின் புதிய அவதாரம்
இயக்குனர் வெங்கட் பிரபு, சூர்யாவின் மாஸ் படத்தை தொடர்ந்து தற்போது சென்னை-28 இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.
இதில் முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர் பட்டாளம் மீண்டும் இணைகிறது.தற்போது தேனியில் படப்பிடிப்பு நடந்து வரும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தை தயாரித்து இயக்குவது மட்டுமின்றி, வெங்கட் பிரபு பாடலாசிரியராக அறிமுகமாகவுள்ளார். படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இவர் வரிகள் எழுதியுள்ளாராம்.
தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், பாடல்கள் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.