ஒரு பெரிய படம் வரும் போதோ, அல்லது அனைவரும் எதிர்பார்க்கும் படம் வரும் போதே மற்ற படங்களை வெளியிடத் தயங்குவார்கள். பண்டிகை நாட்கள் மட்டும்தான் அதற்கு விதிவிலக்காக இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் வெளியீடு தேதி எப்படி இருக்கிறதோ, படங்களை வெளியிட தியேட்டர்கள் கிடைத்தால் போதும் என படங்களை வெளியிடுகிறார்கள்.
வரும் அக்டோபர் 4ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘அசுரன்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கிறது. அந்த தினத்தில் மற்றவர்கள் படங்களை வெளியிடத் தயங்கினர். இருப்பினும் ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே நடித்துள்ள ‘100 % காதல்’ படத்தை அன்றே வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
ஒரு சிறிய பிரிவிற்குப் பிறகு தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ படத்திற்கு மீண்டும் இசையமைத்துள்ள ஜிவி பிரகாஷ், நடிகராகவும் அவருடன் அன்றைய தினம் போட்டி போடுகிறார்.