பொதுவாகவே பெண் இயக்குனர்கள் என்றாலே காதல் மற்றும் குடும்ப கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே இயக்கி வருகிறார்கள். மலையாளத்தில் இதேபோல தேசிய விருதுக்கு போட்டியிட தகுதியான படங்களை இயக்கி வருபவர் நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ்..
நளதமயந்தி படத்தில் மாதவன் ஜோடியாக நடித்தவர். ஏற்கனவே லயர் டயஸ் என்கிற படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இவர், தற்போது நிவின்பாலி நடிப்பில் மூத்தோன் என்கிற படத்தை இந்தி மற்றும் மலையாளத்தில் இயக்கியுள்ளார். இந்த படம் தற்போது ஒவ்வொரு சர்வதேச திரைப்பட விழாவாக கலந்துகொண்டு பரிசுகளை பெற்று வருகிறது.
இந்தப்படத்தை அடுத்து கேங்ஸ்டர் பாணியிலான படமொன்றை இயக்க இருப்பதாக சமீபத்தில் கீது மோகன்தாஸ் கூறியுள்ளார். அதற்கான ஸ்கிரிப்ட் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாகவும் மூத்தோன் பட ரிலீசுக்கு பிறகு இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.