சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இவரது வழக்கமான கமர்சியல் மசாலா படங்களில் இருந்து விலகி, சற்றே சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இப்படம் வெளிவந்தது.
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ள விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ.சந்திரசேகர், அஜித் போல ஒவ்வொரு நடிகரும் இதுபோன்று சமூக விழிப்புணர்வு உள்ள ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என அஜித்தை பாராட்டியுள்ளார்.
இது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, தனது மனைவி ஷோபா அஜித் நடித்த படங்களை முதல் நாளே பார்த்து விடுவார் என்றும், அதேபோல இந்த நேர்கொண்டபார்வை படத்தையும் தனக்கு முன்பே அவர் பார்த்து விட்டார் என்றும் கூறியுள்ளார். மேலும் அஜித்தின் முந்தைய விஸ்வாசம் படத்தை பற்றி அவர் கூறும்போது, அந்த படத்தில் இடம்பெற்ற தந்தை மகள் பாசம் தன் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது என்றும் கூறியுள்ளார்.