நடிகர் விஜய் நடிக்க, அட்லி இயக்கியிருக்கும் படம் பிகில். இந்தப் படத்தின் படபிடிப்பு முடிந்து, வரும் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். இந்தாண்டு தீபாவளி, ஞாயிற்றுக்கிழமை வருவதால் படத்தை சில நாட்களுக்கு முன்னதாகவே வெளியிட்டு, படத்துக்கான வசூலை அள்ளவும் படக்குழு திட்டமிட்டிருக்கிறது.
இதனால், தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த பல படங்களும், தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யாமல், பின் ரிலீஸ் செய்யலாம் என முடிவெடுத்துள்ளன.
பிகில் படத்துக்கு போட்டியாக எந்தப் படமும் தீபாவளிக்கு ரிலீசாகாது என, நினைத்திருந்த நிலையில், திடுமென களத்துக்கு வந்திருக்கிறது கார்த்தி நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் கைதி படம்.
கடந்த பொங்கலுக்கு நடிகர் ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்கள் வெளியாகின. இரு படங்களும் வசூல் ரீதியில் வெற்றி பெற்றன. அதைப் போல, பிகிலும், கைதியும் வெற்றி பெறுமா என்கிற எதிர்பார்ப்பு, சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது.