ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது ஐ.எஸ்.ஐ.எஸ்
சிரியாவில் ராணுவ ஹெலிகாப்டரை ஐ.எஸ். அமைப்பினர் சுட்டு வீழ்த்தியதில் ரஷிய விமானிகள் 2 பேர் பலியாகினர். அந்த வீடியோ காட்சியை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
சிரியாவில் ஐ.எஸ்.அமைப்புத் தீவிரவாதிகள் மீது வான் வழித் தாக்குதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க, ரஷியா உள்ளிட்ட நாடுகள், ஐஎஸ் இயக்கத்தின் இடங்களை அடையாளம் கண்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. சிரியாவின் பழமை வாய்ந்த நகரான பல்மைரா ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த நகரின் ஒரு பகுதி ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் கட்டப்பாட்டில்தான் இருக்கிறது. அந்தப் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்ககாக ரஷ்யாவின் எம்.ஐ.25- ரக ஹெலிகாப்டர் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை பல்மாராவுக்கு சென்றது. வானில் பறந்து கொண்டிருந்த அந்த ஹெலிகாப்டரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தினர். அந்த ஹெலிகாப்டரை ரஷிய விமானிகள் 2 பேர் இயக்கியதாகவும் அவர்கள் இருவரும் கொல்லப்பட்டு விட்டதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது.