கதறி அழுத பிரான்ஸ் ரசிகர்.. ஆறுதல் கூறிய போர்த்துக்கலின் குட்டி சிறுவன்!
யூரோ கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நடந்த ஒரு நெகிழ்ச்சி நிகழ்வு பார்ப்போர் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
யூரோ கிண்ண கால்பந்து தொடரில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் பிரான்ஸ்- போர்த்துக்கல் அணிகள் மோதின.
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியை காண இரு நாட்டு ரசிகர்களும் மைதானத்தில் குவிந்தனர்.
இந்த நிலையில்போர்த்துக்கல் அணி கடைசி நேர கோலால் பிரான்சை 1-0 என வீழ்த்தி முதன்முறையாக கிண்ணம் வென்றது.
சொந்த மண்ணில் பிரான்ஸ் தோல்வியடைந்ததால் அந்த அணி ரசிகர்களால் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் மைதானத்திலே கதறி அழுக ஆரம்பித்தனர்.
இந்நிலையில் ஒரு பிரான்ஸ் ரசிகர் ஏமாற்றத்தில் கதறி அழுது கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போர்த்துக்கல் அணியின் குட்டி ரசிகர் ஒருவர் அவருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அந்த பிரான்ஸ் ரசிகரும் அந்த போர்த்துக்கல் சிறுவனை கட்டியணைத்து கொண்டார். இந்த நிகழ்வு பார்ப்போரை கண்கலங்க வைத்தது.