அபாயகரமான துப்பாக்கி சூட்டு தாக்குதலின் பின்னர் டல்லாஸ் பொலிசாருக்கு குவியும் ஆதரவு.
யு.எஸ்.-டல்லாஸில் இடம்பெற்ற கொடிய துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தை தொடர்ந்து மெழுவர்த்திகள், பூக்கள், கொடிகள் மற்றும் செய்திகள் பொலிஸ் திணைக்கள தலைமையக சுற்று வட்டாரத்தில் வெள்ளம்போல் குவிந்த வண்ணம் உள்ளன. இச்சம்பவத்தில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். வியாழக்கிழமை இடம்பெற்ற மோசமான சூட்டு சம்பவத்தை தொடர்ந்து பொலிஸ் படையினருக்கு சமுதாயத்தின் ஆதரவு பெருகிவருகின்றது.யு.எஸ்.பொலிஸ் வன்முறை குறித்த ஒரு அமைதி ஆர்ப்பாட்டத்தின் போது ஐந்து பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
மறைந்த அதிகாரிகளிற்கு நினைவு கூருதல் வார இறுதி நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டது.
மக்கள் தங்கள் இரங்கல் வார்த்தைகளை சக அதிகாரிகளிற்கு தெரிவித்தனர்.நகர தலைவர்களும் மத தலைவர்களும் சமூகமளித்தனர்.
அத்துடள் டல்லாஸ் முழுவதும் பொலிஸ் படையினருடனான ஒற்றுமையை நிலை நாட்ட வார இறுதி நாட்களில் எல்லை குறிகள் அனைத்தும் வெளிர் நீல வெளிச்சம் ஒளிர விடப்பட்டது.