மனைவியின் உடலின் கீழ் சிக்குண்டு கணவன் பலி
குழந்தைக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலமையின் காரணமாக பதற்றமடைந்த குறித்த குழந்தையின் பெற்றோர் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயலும் போது ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டமையினால் மாடிப்படிகளில் உருண்டு விழுந்த வேளை மனைவியின் உடலின் கீழ் சிக்குண்டு கணவரொருவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த குழந்தைக்கு சுவாசிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த குறித்த குழந்தையின் பெற்றோர் மேல் மாடியிலிருந்து குழந்தையை வைத்தியசாலைக்கு அவசரமாக கொண்டுச் செல்ல முயற்சித்துள்ளனர்.
வேகமாக மாடியிலிருந்து இறங்கும் போது இருவரும் மோதிக்கொண்டதையடுத்து கால் இடறி மேலிருந்து கீழ் வரை உண்டு விழுந்துள்ளனர்.
இதன் போது 128 கிலோ கிராம் நிறையுடைய குறித்த பெண்ணின் உடலின் கீழ் சிக்குண்ட கணவனுக்கு மூச்சு திணரல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த அப் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, குறித்த குழந்தைக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலமையின் காரணமாக ஏற்பட்ட பதற்ற நிலைமையினாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
– See more at: http://www.canadamirror.com/canada/65490.html#sthash.m0qPEmGp.dpuf