இம்மாதம் சிம்பு, தனுஷ் ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி
இப்போதெல்லம் நடிகர்கள் தங்களது படங்களில் பாடுவது மட்டுமில்லாமல் மற்ற நடிகர்களின் படங்களுக்கும் பாடுகிறார்கள். அந்த வகையில் சிம்பு நிறைய பாடல்களை மற்ற நடிகர்களுக்கு பாடியுள்ளார்.
விக்ரம்பிரபு நடித்துள்ள வீரசிவாஜி படத்திற்காக டி.இமான் இசையில் சிம்பு பாடிய ‘தாறுமாறு தக்காளி சோறு’ என்ற பாடல் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
அதேபோல் நடிகர் கிருஷ்ணா நடித்து வரும் யாக்கை படத்திற்காக யுவன்ஷங்கர் ராஜா இசையில் தனுஷ் பாடிய ‘சொல்லித்தொலையேம்மா’ என்ற சிங்கிள் பாடல் வரும் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நடிகர்கள் பாடிய பாடல்கள் இம்மாதம் வர இருப்பதால் ரசிகர்கள் செம சந்தோஷத்தில் உள்ளனர்.