சுதந்திர தினத்தன்று அமெரிக்காவில் தாக்குதல் நடத்தப்போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். மிரட்டல்
அமெரிக்காவில் சுதந்திர தினத்தன்று முக்கிய இடங்களை குறிவைத்து மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள மிரட்டல் செய்தியில் அமெரிக்காவில் வரும் 4ம் தேதி சுதந்திர தினம் நடைபெறும்போது, லால் ஏஞ்சல்ஸ், நியூயார்க் நகரங்களிலும், முக்கிய விமான நிலையங்களிலும் தற்கொலை தாக்குதல் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் அனைத்து விமான நிலையங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆன்லைனில், தீவிரவாத செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
துருக்கியின் இஸ்தான்புல் விமானநிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட சில நாட்களிலேயே இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டும் இதே போன்று ஒரு அச்சுறுத்தலை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.