தாம் தமது ஆட்சிக் காலத்தில் யுத்தம் இருந்த போதும் மின் வெட்டை நடைமுறைப்படுத்தவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
தமது ஆட்சிக் காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருந்த போதிலும், நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் அமைத்தோம். அவ்வாறு அமைக்க வில்லையென்றிருந்தால், இப்போது மக்கள் இருளில் மூழ்கியிருக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.
நேற்று கம்பொல நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.