போஸ்னிய அரசியல் தலைவரான கராதி மீது போர்க்குற்றம் புரிந்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஐ.நா நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.
ரடோவன் கராதி, கடந்த 1990ம் ஆண்டு ரஷ்யா உடைந்த பின் போஸ்னியாவில் அரசியல் தலைவராகவும், செர்பிய இன மக்களின் போராளியாகவும் இருந்துள்ளார். ரடோவன் கராதி 1995-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் 8,000 இஸ்லாமியர்களைக் கொன்று குவித்துள்ளார். இதன் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐ.நா விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு ரடோவன் கராதிக்கு 40 – ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனுவை தீவிர விசாரணை செய்த நீதிபதிகள் கராதிக்கு விதிக்கப்பட்ட 40-ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்துள்ளனர்.