மக்கள் விடுதலை முன்னணிக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்று 2.00 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்ககோரும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியை அங்கத்துவப்படுத்தும் வகையில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத், சுனில் ஹத்துனெத்தி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதற்கு முன்னர் இந்த விடயம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணிக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்ய ஒப்புக்கொள்ள மாட்டேன் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் இந்த விடயம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.