சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் திகதி முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தது. இதில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
குறித்த பேச்சுவார்த்தையில் பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளதாக சுதந்திர கட்சியின் முன்னாள் செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.