யாழ்ப்பாணத்தில் பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதல்
குறைந்த விலையில் சிகரெட் தருமாறு கோரி கடை உரிமையாளர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு மதுபோதையில் யாழ். பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், யாழ். பேரூந்து நிலையத்தின் பின்புறமாக உள்ள தேனீர் கடை ஒன்றிற்கு சென்று, 100 ரூபாவிற்கு 4 சிகரெட் தருமாறு கோரி கடை உரிமையாளர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த கடைக்குச் சென்று, 100 ரூபாவினைக் கொடுத்து விட்டு பொலிஸார் 4 சிகரெட் தருமாறு கோரியுள்ள நிலையில், கடை உரிமையாளர் இரண்டு சிகரெட்டுகள் தான் தர முடியும் என்றும் ஒரு சிகரெட்டின் விலை 40 ரூபா என்றும் கூறியுள்ளார்.
கோபமடைந்த பொலிஸார் ஏன் 40 ரூபா, என்றும் சிகரெட் ஒன்று 30 ரூபா தானே என்று கேட்டும் தகராற்றில் ஈடுபட்டுள்ளனர்.
தகராறு பெரிதாகவும், கடை உரிமையாளரான இளைஞரை தமது கையில் வைத்திருந்த தலைக்கவசத்தினால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த இளைஞர் இந்த சம்பவம் குறித்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டிற்கு அமைய தாக்குதல் நடத்திய இரு பொலிஸார் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
புதிய இணைப்பு
யாழ்.நகருக்குள் உள்ள வணிக நிலையம் ஒன்றின் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கப்பம் பெற் றனர் என பொலிஸாருக்கு எதிரா க யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை 12 மணிக்கும் 12.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் யாழ் நகரப் பகுதியில் உள்ள இரவு நேர விற்பனை நிலையமொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் உள்ள குறித்த கடைக்கு நேற்று முன்தினம் சிவில் உடையில் சென்ற யாழ் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸார் அவ் விற்பனை நிலைய பணியாளரிடம் தமக்கு கப்பமாக சிகரெட் தருமாறு கேட்டுள்ளனர்.
இதற்கு குறித்த பணியாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த விற்பனை நிலைய பணியாளர்களுடன் பொலிஸார் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் அவர்களை தாம் கொண்டு சென்ற மோட்டார் சைக்கிளின் தலைக் கவசத்தால் பலமாக தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக குறித்த விற்பனை நிலைய பணியாளர்களால் அதிகாலை 1.00 மணியளவில் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர்.
மேலும் குறித்த பொலிஸாருடைய தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இருப்பதாகவும் அவற்றை விட விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கமராக்களில் குறித்த சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றை வழக்கு நடவடிக்கையின் போது நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை யாழ் பொலிஸ் நிலைய பொலிஸார் சிலர் குறித்த பொலிஸ் நிலையஎல்லைக்குட்பட்ட கிராமங்களுக்கு சென்று அங்குள்ள சிறு விற்பனையாளர்கள்,கைத்தொழிலாளர்கள் ஆகியோரிடம் கப்பம் பெறுவதாகவும் பலராலும் தெரிவிக்கப்படுகின்றதுடன் பொலிஸார் யாழ் நகரிலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்றில் கப்பமாக மது பெற்றுச் செல்கின்ற