ரியோ ஒலிம்பிக்கில் மின்னல் மனிதன் பங்கேற்பதில் சிக்கல்!
மின்னல் மனிதன் என்று அழைக்கப்படும் ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டிற்கு தொடைப்பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அவர் ரியோஒலிம்பிக்கில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்: நேற்று முதல் சுற்று போட்டியில் பங்கேற்றதை தொடர்நது தொடைப்பகுதியில் எனக்கு கோளாறு ஏற்பட்டது.
இதைத்தொடர்நது, அரையிறுதியின் போது தேசிய தடகள தலைமை மருத்துவர்கள் என்னை ஆய்வு செய்து பிரச்சனையை கண்டறிந்தனர்.
இதனையடுத்து, போட்டியில் கலந்து கொள்ள இயலாமைக்கு, விளையாட்டு கவுன்சிலிடம் மருத்துவ சான்றிதழ் வழங்கி உள்ளேன்.
Starting the recovery process right away.
ஆனால், உரிய சிகிச்சை பெற்று, எதிர்வரும் 22ம் தேதி லண்டன் விளையாட்டு போட்டிகளுக்கான மருத்துவ சோதனையில் தேர்ச்சி பெறுவேன் என போல்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எனினும், பேல்ட் மருத்துவ சோதனையில் தேர்ச்சி பெற்று ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவது சிரமம் என கூறப்படுகிறது.