சென்னையை சேர்ந்தவர் சாய் பிரியங்கா ருத். சினிமாவில் ரிச் கேர்ளாக நடித்து வந்தவர் கேளடி கண்மணி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன்பிறகு சில தொடர்களில் நடித்தார். கிராமத்தில் ஒரு நாள் என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றார்.
சின்னத்திரையில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது பெரிய திரையிலும் தலைகாட்டி வந்தார். மெட்ரோ, எனக்கு வாய்த்த அடிமைகள் படங்களில் சிறிய கேரக்டரில் நடித்தவர், தற்போது கேங்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்து இயக்கும் இந்தப் படத்தில் அவர் லேடி தாதாவாக நடித்திருக்கிறார்.
பிரியங்கா ருத் தவிர அசோக், பகவதி பெருமாள், வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹரி டபுசியா இசை அமைத்துள்ளார், கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்துள்ளார். அடுத்த மாதம் படம் வெளிவருகிறது.