சர்வம் தாளமயம் படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நடிப்பில் 100% காதல், வாட்ச்மேன், குப்பத்து ராஜா, ஜெயில், 4ஜி உள்ளிட்ட அரை டஜன் படங்கள் அடுத்தடுத்து இடைவெளி விட்டு வெளியாக உள்ளன.
கடந்தவாரம் தான் பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள குப்பத்து ராஜா படம் ஏப்ரல் 5ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். தற்போது விஜய் இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ் நடித்துள்ள மற்றொரு படமான வாட்ச்மேன் படமும் ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரேமாதத்தில் இரண்டு படங்கள் வெளியாக இருப்பதால் ஜிவி.பிரகாஷ் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.