தேவ் படத்திற்கு பிறகு ரொம்பவே விழிப்புடன் இருக்கிறார் கார்த்தி. சீரியசான, சென்ட்டிடிமென்ட் படங்கள் தான் தனக்கு சரிப்பட்டு வரும் என்ற முடிவு செய்திருக்கிறார். தற்போது, அவர் ரெமோ படத்தை இயக்கி, பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.
அதேப்போல, மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டுக்குள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது. தற்போது, இந்தப்படத்திற்கு கைதி என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்தப்படத்தின் கதை ஒரே இரவில் நடக்கிறது. செய்யாத தவறுக்காக கைதியாகி சிறையில் இருக்கும் ஒருவன், தன்னை குற்றவாளியாக்கி உள்ளே தள்ளியவர்களை சிறையில் இருந்து தப்பித்து, ஒரே இரவில் பழிவாங்கிவிட்டு, மீண்டும் சிறைக்குள் சென்று விடுகிற மாதிரி கதை என்கிறார்கள். ஒரு ஆங்கில படத்தின் தழுவல் என்றும் சொல்கிறார்கள்.
படத்தில் ஹீரோயின் இல்லை. படம் தொடங்கியது முதல் முடிகிற வரை ஒரு கிளைமாக்சுக்கான பரபரப்பிலேயே படம் நகரும் என்கிறார்கள். இதன் 70 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இன்னும் ஒரு சில தினங்களில் டைட்டிலுடன் படத்தின் பர்ஸ்ட்லுக் வெளிவர இருக்கிறது.