மகா சிவராத்திரி விழா நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவையில், ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்திருந்தனர். 112 அடி ஆதியோகி சிலை முன்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
இந்த நிகழ்வில் சினிமா பிரபலங்களும் பங்கேற்றனர். நடிகர் ராணா, நடிகைகள் காஜல் அகர்வால், தமன்னா மற்றும் அதிதி ராவ் ஆகியோரும் மகா சிவராத்திரி நிகழ்வில் பங்கேற்று, ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.