எம்.எஸ்.தோனி உட்பட பல ஹிந்தி படங்களில் நடித்தவர் கியாரா அத்வானி. தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த, பாரத் அனே நேனு மற்றும் வினய விதேயா ராமா படங்களில் நடித்திருக்கிறார்.
இந்தநிலையில், தமிழில் தான் இயக்கி, நடித்து வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்கிறார் ராகவா லாரன்ஸ். தமிழில் லாரன்ஸ் நடித்த வேடத்தில் அக்சய் குமார் நடிக்க, நாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். சரத்குமார் வேடத்தில் முக்கிய நடிகர் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.