சூர்யா நடிப்பில் ‘சிங்கம்-2’, த்ரிஷா நடிப்பில் ‘மோகினி’ ஆகிய படங்களை தயாரித்த நிறுவனம் லக்ஷமன் குமாரின் ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் கார்த்தி நடிப்பில் ‘தேவ்’ படத்தை சுமார் 30 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்தது. பிப்ரவரி 14 அன்று வெளியான ‘தேவ்’ படம் படுதோல்வியடைந்ததோடு, தயாரிப்பாளருக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்திவிட்டது.
இதற்கிடையில் ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ லக்ஷ்மன் குமார், தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதாவது ஜெயம் ரவி நடித்த ‘அடங்க மறு’ படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் படம் தயாரிக்க இருப்பதாக அறிவித்தார்.
இந்த படத்தில் இடம்பெறவிருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. தனது முதல் படத்தின் மூலம் வெற்றிப் பட இயக்குனராக உயர்ந்த கார்த்திக் தங்கவேலுக்கு உடனடியாக இரண்டாவது படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தேவ் பட நஷ்டத்தால், இந்தப்படம் ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.