கடந்த ஆண்டில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் வெற்றிப்பட இயக்குநரான மாரி செல்வராஜ், அடுத்து தனுஷ் இயக்கும் படத்தை இயக்க இருக்கிறார். மாரி செல்வராஜும், தனுஷும் இணையும் இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிக்கிறார்.
இதனால் தனது இரண்டாவது படத்திலேயே தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷை இயக்கும் வாய்ப்பை பெற்றார் இயக்குநர் மாரி செல்வராஜ். தனக்குக் கிடைத்த மிகப்பெரிய இந்த வாய்ப்பை அவர் தக்க வைத்துக்கொள்ளாமல் அலட்சியமாக இருக்கிறார் என்ற குரல் திரையுலகில் கேட்க ஆரம்பித்துள்ளது.
பரியேறும் பெருமாள் படத்தில் சாதி ரீதியான பிரச்சனைகளை மையப்படுத்தி எடுத்ததால், அப்படத்திற்கு பாராட்டு கிடைத்தது. ரஜினி, கமல், சிவகுமார், பாரதிராஜா உட்பட பல திரையுலக பிரபலங்களின் பாராட்டுக்களும் கிடைத்தது. இதன் காரணமாக பரியேறும் பெருமாள் படத்துக்கு கவனஈர்ப்பு கிடைத்து வெற்றிப் படமாகவும் அமைந்தது.
அதன் தொடர்ச்சியாக ஊர்ஊராக சென்று பாராட்டு விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார் மாரி செல்வராஜ். எனவே தனுஷ் படத்துக்கான ஸ்கிரிப்ட் வொர்க்கில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லையாம். அதனால் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் தாணு இருவரும் மாரிசெல்வராஜ் மீது மன வருத்தத்தில் இருக்கிறார்களாம்.