ரூ 250 கோடி சாதனையை முறியடிக்குமா டார்ஜன்?
இந்திய சினிமாவில் சமீப காலமாக ஹாலிவுட் படங்களின் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. அதிலும் கடந்த கோடை விடுமுறையில் வந்த ஜங்கிள் புக் ரூ 250 கோடி வரை இந்தியாவில் வசூல் செய்தது.
இதை தொடர்ந்து எக்ஸ்.மேன் சீரியஸ், சிவில் வார், கான்ஜு ரிங்-2 ஆகிய படங்களும் நல்ல வசூலை தந்தது. இந்நிலையில் அடுத்து இந்தியா முழுவதும் பல திரையரங்குகளில் இந்த வாரம் வெளிவரும் படம் டார்ஜன். இப்படத்தின் தமிழக உரிமையை K.R.கிரியேஷன் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படம் ஜங்கிள் புக் சாதனையை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம், மேலும், இப்படத்தை இலவசமாக பார்க்க, இப்படத்தின் இயக்குனர் யார், நடிகர் யார்? என்ற கேள்விக்கு [email protected] என்ற மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பி இலவச டிக்கெட்டை வெல்லுங்கள்.