எனக்கும் அவருக்கும் பிரச்சனை உண்டாக்காதீர்கள்- விக்னேஷ் சிவன் வருத்தம், சிம்பு விளக்கம்.
போடா போடி, நானும் ரவுடி தான் படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவர் சமீபத்தில் ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் விழாவில் அனிருத்தால் தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்பது போல் பேசினார்.
உடனே சிம்பு ரசிகர்கள் பலரும் சிம்பு தானே உங்களுக்கு முதல் வாய்ப்பு கொடுத்தது, பிறகு ஏன் இப்படி பேசுகிறீர்கள் என கோபமாக கருத்து தெரிவித்தனர்.
அதற்கு அவர் ’எனக்கும் சிம்புவிற்கு நல்ல நட்பு தான் இருக்கின்றது, என்னை பாடலாசிரியராக அறிமுகம் செய்தது அனிருத், அந்த அர்த்தத்தில் தான் சொன்னேன்.
இதற்காக என்னைப்பற்றி தவறாக எந்த தகவலும் கூற வேண்டாம், மேலும், சிம்புவிற்கு என்னை பற்றி நன்றாக தெரியும். அவருக்கும் எனக்கும் எந்த பிரச்ச்னையும் இதன் மூலம் கொண்டு வராதீர்கள் என கூறினார்.
இதற்கு சிம்பு தரப்பும், ‘விக்னேஷ் சிவன், சிம்பு மீது மிகுந்த மரியாதை கொண்டவர், இந்த பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம்’ என கூறியுள்ளனர்.