யு.எஸ்.டொலரிற்கெதிராக வீழ்ச்சியடைந்த கனடிய டொலர் பவுன்டிற்கெதிராக உயர்வு!
ஒரு சதத்திற்கும் மேலாக குறைந்த கனடிய டொலர் பவுன்டிற்கெதிராக உயரந்துள்ளது. பிரிட்டனை ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக வைத்த Brexit வாக்கெடுப்பை தொடர்ந்து பிரிட்டிஷ் நாணயம் இன்று காலை கனடிய டொலர்கள் உட்பட்ட ஏனைய நாணயங்களிற்கெதிராக தீவிரமாக சரிந்துள்ளது.
பிரிட்டிஷ் நாணயம் 1980ன் நடுப் பகுதிகளில் இருந்து இவ்வாறு குறைந்ததில்லை.
யு.எஸ்.டொலர்களுடன் ஒப்பிடுகையில் 8சதவிகிதத்திற்கும் அதிகமாகவும் 6.5சதவிகிதம் கனடிய டொலரிற்கு எதிராகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பவுன்ட் யு.எ.ஸ்.டொலர் 1.37ற்கு கீழேயும் 1.79கனடிய டொலர்களிற்கு கீழேயும் குறைந்து காணப்படுகின்றது.