மஹிந்த ராஜபக்ஷ நாளை ராஜினாமா செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதுடன் நாளை ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டு மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்வார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்ட ஒரு கட்சி அரசாங்கத்தை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் அபேவர்தன தெரிவித்துள்ளார்.