அனைத்து காலங்களிற்குமான மிகச்சிறந்த ஹொக்கி விளையாட்டாளர் Gordie Howe காலமானார்.
கனடா-தனது மூன்று தசாப்த வாழக்கை முழுவதும் தேசிய ஹொக்கி லீக்கில் எண்ணற்ற சாதனைகளை நிலைநாட்டியவரும் “Mr. Hockey” என அனைவராலும் அறியப்பட்டவருமான Gordie Howe வெள்ளிக்கிழமை காலை ஒகையோவிலுள்ள அவரது மகனின் வீட்டில் தனது 88வது வயதில் மரணமானார் என குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தொழில்முறை ஹொக்கி விளையாட்டாளராக இருந்த காலத்தில் “Mr. Hockey” என்ற புனைபெயரை ஹோவ் பெற்றார்.
இவர் சஸ்கற்சுவானில் வுளொரல் என்ற இடத்தில் பிறந்தார்.தனது 15-வது வயதில் பணியை ஆரம்பித்தவர்.
இவரது மரணம் மிகமிக துயரமானதென பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
– See more at: http://www.canadamirror.com/canada/64106.html#sthash.itHynDv8.dpuf