லிபரல் கட்சிக்கான வேட்பாளர் தெரிவில் பிரகல் திரு வெற்றி பெற்றார்.
ஸ்காபரோ ரூச்ரிவர் தொகுதிக்கான வேட்பாளராக லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளரைத் தெரிவு செய்யும் தேர்தலில் திரு. பிரகல் திரு வெற்றி பெற்றார்.
இந்தத் தொகுதியில் மாகாணசபை உறுப்பினர் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட இடைவெளியை நிரப்புவதற்கான இடைத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட ஆறு பேர் முன்வந்திருந்தனர்.
கட்சியின் சார்பில் அவர்களின் தெரிவிற்கான வாக்கெடுப்பு இன்று ஸ்காபரோ நகரத்தில் இடம்பெற்றது இதன்போது வாக்கெடுப்பில் பிரகல் திரு வெற்றி பெற்றார்.
கனடியத் தமிழ்க் காங்கிரஸின் இயக்குனர் சபை உறுப்பினர், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இயக்குனர் சபை உறுப்பினராக இருந்தவர்.
1700க்கும் மேற்பட்ட வாக்களார்கள் கலந்து கொண்ட இந்த உள்ளகத் தேர்தலில் 1370க்கு மேற்பட்ட வாக்குகளை பிரகல் திரு அவர்கள் பெற்றுக் கொண்டார்.
கனடிய மாநகராட்சி அலகொன்றில் பொதுப்போக்குவரத்துறை சம்பந்தமான உயர்பதவியை வகித்துவரும் பிரகல் திரு தேர்தல் முடியும் வரை தற்காலிக ஓய்வில் இருந்து முழு நேரமாக தனது தேர்தல் பணிகளைத் கவணித்து வருகின்றார்.