பெண்களுக்கான ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 4வது இடத்துக்கு முன்னேறினார்.
சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. ‘பேட்டிங்’ தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 14வது இடத்தில் இருந்து முதன்முறையாக ‘நம்பர்–4’ இடத்துக்கு முன்னேறினார். இவர், இந்த ஆண்டு இதுவரை விளையாடிய 9 போட்டிகளில், ஒரு சதம், 5 அரைசதம் உட்பட 531 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், 7வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி உள்ளார்.
பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜுலான் கோஸ்வாமி, 5வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஜெஸ் ஜோனாசன் உள்ளார்.
‘ஆல்–ரவுண்டர்’களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா, முதன்முறையாக ‘நம்பர்–3’ இடம் பிடித்தார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி உள்ளார்.