கர்நாடக தேர்தலில் போட்டியிட பா.ஜ., சார்பில் கும்ளே, டிராவிட்டை அணுகியதாக தெரிகிறது.
இந்திய ‘சுழல்’ ஜாம்பவான் கும்ளே, 47. பேட்டிங் ‘சுவர்’ டிராவிட், 45. கர்நாடகத்தை சேர்ந்த இவர்களுக்கு கிரிக்கெட் ரசிகர்களிடம் இன்னும் மவுசு காணப்படுகிறது. டிராவிட் பயிற்சியில் இந்திய ‘இளம்’ அணி, உலக கோப்பை வென்றுள்ளது.
இதனிடையே, கர்நாடகாவில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், இருவரையும் களமிறக்கி, இளைஞர்கள் ஆதரவை பெற, பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக, கும்ளே, டிராவிட்டை அணுக, இவர்கள் மறுத்து விட்டனராம்.
மனம் தளராத பா.ஜா., இன்னும் தங்களது முயற்சியை கைவிடவில்லை. இருவரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் ஒருவர், ராஜ்ய சபா அல்லது லோக்சபா உறுப்பினராக விருப்பம் தெரிவித்துள்ளாராம்.