கண்டி, திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இன்று (05) காலை முதல் ஏற்பட்ட அசம்பாவிதங்களின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்தின தேரர் தலைமையில் தெல்தெனிய பொலிஸ் நிலையம் முன் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்த நபர் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்ன தேரரின் உறவினர் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய வன்முறைச் சம்பவத்தில் 24 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பலர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள், வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகள் என்பன சேதம் விளைவிக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.