சம்பவத்திற்கு போவதும், அறிக்கை விடுவதும், வீராப்பு பேசுவதுமாக முஸ்லீம் தலமைகள் கோமாளிகளாக உள்ளனர் என்றும் .
உங்களுக்கு முடியுமானால் உடனடியாக சர்வகட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறும் ஐனாதிபதி,பிரதமர் மற்றும் சபாநாயருக்கு அழைப்பு விடுங்கள் எனக்கூறியும் .
மஹிந்தவைக் குற்றம்சாட்டி கும்மாளம் அடித்த உங்களுக்கு நெஞ்சை நிமிர்த்தி சமூகத்திற்காக பேச முடியாதுள்ளது எனவும் .
நீங்கள் காத்திரமான எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால்,அதிக விலை கொடுக்க வேண்டிவரும்.
இவ்வாறு முஸ்லீம் இளைஞர்கள் தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளனர் அதில் பொறுமைக்கு முதலில் நீங்களே பழியாக வேண்டி ஏற்படலாம் எனவும் கூறியுள்ளனர் .