கண்டி, திகண பிரதேச சம்பவம் குறித்து பக்கசார்பற்ற, சுயாதீனமான விசாரணையை மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்பு
கண்டி, திகண பிரதேசத்தில் இன்று இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்றதும், சுயாதீனமானதுமான விசாரணையொன்றினை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் பொலிசாருக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் பிரதேசத்தின் சகல மக்களினதும் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகளை தவித்துக்கொள்வதற்காக சகல தரப்பினருடனும் இணைந்து பொறுப்புடன் செயலாற்றுமாறு பாதுகாப்பு தரப்பினரை மேலும் அறிவுறுத்திய ஜனாதிபதி அவர்கள், பிரதேசத்தில் சமாதானத்தை உறுதி செய்வதற்கு மேற்கொள்ளவேண்டிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.03.05