கட்டாா் நாட்டினால் உலக நாடுகளில் உதவிபுரியும் அமைப்பான கட்டாா் சரட்டி” உதவி நிதியம் என்ற சர்வதேச தன்னாா் அரச சாா்பற்ற நிறுவனத்தின் இலங்கைக்கான புதிய அலுவலகமொன்றை கட்டாா் கொழும்பு துாதுவராலயம் கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் அங்குராப்பணம் செய்து வைத்தது.
இந்் நிகழ்வுக்கு கட்டாா் நாட்டின் துாதுவா் பைசால் பின் ரசீத் அல்பாகிடா வின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச , கலந்து கொண்டு புதிய அலுவலகத்தினை திறந்து வைத்தாா்.
இந் நிகழ்வின்போது அமைச்சா் றிசாத் பதியுத்தீன், இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, பாராளுமன்ற உறுப்பிணா் எம்.மஸ்தான், மற்றும் சட்டத்தரணிகள் இராஜதந்திரிகளும் கலந்து சிறப்பித்தனா்.