வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட் டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுக்களின் செயலாளராகப் பணியாற்றிய இவர் சுமார் 25 ஆண்டுகளாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளராகப் பணியாற்றி வருகின்றார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் இவரை மாகாணத்துக்கு வெளியே பணிக்கு அமர்த்த வேண்டும் என்று கடந்த 6 மாதகாலமாக தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்த நிலையில் கடந்த ஆண்டு டிசெம்பர் வரை அவர் கால அவகாசம் கோரியிருந்தார்.
டிசம்பர் மாதம் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பின் பின்னர் இடமாற்ற உத்தரவுகளும் இடைநிறுத்தப்பட்டன. தற்போது தேர்தல் முடிவுற்ற நிலையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சுக்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.