பண்டாரவளை கஹகொல்ல பிரதேசத்தில் நேற்றுஅதிகாலை இடம்பெற்ற பஸ் தீப்பற்றல் சம்பவத்துக்கு இராணுவ வீரர் ஒருவரிடம் இருந்த கைக்குண்டொன்று வெடித்ததே காரணம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சம்பவத்தில் 07 இராணுவ வீரர்கள், 05 விமானப்படை வீரர்கள் மற்றும் 07 பொது மக்கள் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்தனர். அதில் இரண்டு இராணுவ வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.