இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கப்டன் ஸீன் அன்வின் மற்றும் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் சந்திப்பை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது