கொஸ்கம கழுஹக்கல பகுதியை ஊடறுத்துச்செல்லும் களனி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போன இரு இளைஞர்களில் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது.
21 வயதுடைய கஹபிட்டி பகுதியில் வசிக்கும் இளைஞரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
காணாமல் போயுள்ள 19 வயதுடைய பிரிதொரு இளைஞர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில் அவரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மீட்கப்பட்ட இளைஞரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்களுக்காக வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.