தாமரை மொட்டிலிருந்து தமிழீழம் மலரும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிதற்றுகிறார். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித் தார்.
“தீர்வு முயற்சிகள் எனது ஆட்சிக்காலத்தில் நடந்தபோது சம்பந்தன் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. அப்போது இந்தியாவின் பேச்சைக் கேட்டு நடந்த சம்பந்தன், இன்று தாமரை மொட்டில்தான் தனித் தமிழீழம் மலரும் என்று சொல்வது நகைப்பாக இருக்கிறது”-என்று மகிந்த குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், புதிய அரசமைப்புத் தொடர்பில் தவறான பரப்புரைகளை மகிந்த அணி முன்னெடுக்குமாயின் தாமரை மொட்டிலிருந்தே தனித் தமிழீழம் மலரும் என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.
“எனது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற தீர்வுப் பேச்சுகளுக்கு ஒத்துழைக்காமல் சம்பந்தன் இப்போது பிதற்றுகின்றார். அப்போது புலம்பெயர்ந்தவர்களின் பேச்சையும் இந்தியாவின் பேச்சையும் கேட்டு சம்பந்தன் எங்களுடன் ஒத்துழைக்கவில்லை. ஒரு பேச்சு நடக்கும்போது பல கருத்துக்கள் வரலாம். பல சிக்கல்கள் வரலாம். ஆனால், ஒத்துழைக்காமல் இருப்பது நியாயமானதல்ல. சம்பந்தன் அதனைச் செய்தார். இப்போது தாமரை மொட்டிலிருந்து தனித் தமிழீழம் மலரும் என்று அவர் சொல்லுவது வெறும் பிதற்றலே.”- என்று அவர் கூறியுள்ளார்.