சகல இனங்களும் தாம் விரும்பிய மொழியில் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று தேசிய மொழிக்கற்கை பயிற்சி நிறுவனத்தின் தலைவர் சந்தன அருணதேவ தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லாவிட்டால், எல்லோருக்கும் தாய்நாடு பற்றிய உணர்வு ஏற்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆரம்ப மட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு 50 மணித்தியாலம் மற்றும் 100 மணித்தியாலம் கொண்ட மொழி பயிற்சிநெறியை தயாரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, மொழிபெயர்ப்பு உத்தியோகத்தர்களை புதிதாக இணைத்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சந்தன அருணதேவ மேலும் தெரிவித்துள்ளார்.