தலங்கம பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் இருவர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது.
துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இருவரும் கணவன், மனைவியெனவும் இருவரும் சிகிச்சைக்காக கொழும்பு தேசியமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நித்திரையில் இருக்கும் போது, வீட்டுக் கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டுத் தப்பிச்சென்றனர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.